ஹைலைட்ஸ்:

  • ஆயிரத்தில் ஒருவன் பட்ஜெட் குறித்து ட்வீட்டிய செல்வராகவன்
  • பட்ஜெட் விஷயத்தில் பொய் சொன்னோம்- செல்வராகவன்

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்த படம் ஆயிரத்தில் ஒருவன். அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தன் தம்பி தனுஷை வைத்து இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டார் செல்வராகவன்.

இதற்கிடையே தனுஷை வைத்து ராயன் என்கிற படத்தை இயக்க தயாராகி வருகிறார். ராயன் படத்தின் ஷூட்டிங் நாளை துவங்கவிருக்கிறது.

இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் பட பட்ஜெட் பற்றி ட்வீட் செய்துள்ளார் செல்வராகவன். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

selvaraghavan

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் உண்மையான பட்ஜெட் ரூ. 18 கோடி. ஆனால் அதை மெகா பட்ஜெட் படமாக காட்ட ரூ. 32 கோடி என்று அறிவிக்க முடிவு செய்தோம். என்ன ஒரு முட்டாள்தனம்! உண்மையான பட்ஜெட் தொகையை படம் வசூல் செய்தபோதிலும், அது சராசரியாக கருதப்பட்டது. என்ன முரண்பாடாக இருந்தாலும் பொய் சொல்லக் கூடாது என்று கற்றுக் கொண்டேன் என்றார்.

aayirathil oruvan

செல்வராகவனின் ட்வீட்டை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

ஆயிரத்தில் ஒருவன் சுமாரான படம் தான். ஆயிரத்தில் ஒருவன் 2 படத்திற்கு தனுஷ் சரிபட்டு வரமாட்டார். போதையாக இருந்தால் ட்விட்டர் பக்கம் வராமல் போய் தூங்குங்கள். இப்படி காலையிலேயே போதையா?

ராயன் படப்பிடிப்பு நாளை துவங்குவதால் இப்படி ஒரு ட்வீட்டா என தெரிவித்துள்ளனர்.

பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம்: பொண்ணு நம்ம குக் வித் கோமாளி…