இந்த ஐபிஎல் 2022-ல் பஞ்சாப் கிங்ஸ் பெரிய சக்தியாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதுதான், ஆனால் அதுக்கென்று முதல் போட்டியிலேயே பாவம் ஆர்சிபி கேப்டன் ஃபாப் டு பிளெசிஸ் செய்வதறியாது அசட்டுச் சிரிப்பு சிரிக்கவைத்தது பஞ்சாப் கிங்ஸின் அதிரடி. ஆர்சிபி 13 சிக்ஸ் 9 பவுண்டரிகள்தான் அடித்தனர், ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 14 பவுண்டரி 11 சிக்சர்கள் அடித்தனர். அதாவது 150 ரன்களை பவுண்டரி சிக்சர்களிலேயே விளாசியது. கடைசியில் ஆர்சிபியின் தோல்விப்பழக்கம் அந்த அணியை நிலைகுலையச் செய்து விட்டது.
