மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி ’பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அண்மையில் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. இந்நிலையில் மலையாளத்தின் பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்னை வந்துள்ளார்.

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார் நெல்சன் திலீப்குமார். கடந்த ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து பீஸ்ட் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியது. அப்போது விஜய் சம்பந்தமான காட்சிகளும், பாடல் காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்நிலையில் இரண்டாம் கட்ட படபிடிப்பை முடித்துவிட்டு கடந்த சில நாட்களாக ஓய்வில் இருந்த நடிகர் விஜய், தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கு தயாராகி உள்ளார். அதன்படி அண்மையில் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த படப்பிடிப்பு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

‘அந்தகன்’ பட டப்பிங்கில் கலந்து கொண்ட நவரச நாயகன்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
இந்நிலையில் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள நேற்றைய தினம் ஷைன் டாம் சாக்கோ விமானம் மூலம் சென்னை வந்தார். அதனை தொடர்ந்து நேரடியாக பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாள் அன்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.