சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் துவங்கியது. அதனை தொடர்ந்து அண்மையில் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. இந்நிலையில் ‘பீஸ்ட்’ படத்தில் பணியாற்றுவது குறித்து நடிகர் கவின் தெரிவித்துள்ளார்.

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கி வருகிறார் நெல்சன் திலீப்குமார். கடந்த ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியது. அப்போது விஜய் சம்பந்தமான காட்சிகளும், பாடல் காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு வில்லன்களாக மூன்று பேர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் இயக்குநர் செல்வராகவன் இந்த படத்தில் விஜய்க்கு வில்லன்களாக நடித்து வருகின்றனர். ‘சாணிக் காயிதம்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் நடித்து முடித்துள்ள செல்வராகவன் அடுத்ததாக ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்யுடன் நடிக்கவுள்ளார்.

45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்தவர்: எஸ்பிபி குறித்து நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!இதனிடையே பீஸ்ட் படத்தில் பிக்பாஸ் பிரபலம் கவின் உதவி இயக்குனராக பணியாற்றி வருவதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுபற்றி பேசிய கவின், ‘பீஸ்ட்’ படத்தில் நான் எந்த விதத்திலும் பங்காற்றவில்லை. முதலில் என்னிடம் பேசியிருந்தார்கள். ஆனால், மற்ற படங்களில் பிசியானதால் அதில் பங்காற்ற முடியவில்லை.

மேலும், குழந்தைகள் விமானம் மேலே பறப்பதை வேடிக்கை பார்ப்பது போல, பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பைப் பார்க்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு. விஜய்யைத் தனிப்பட்ட முறையில் சந்திக்க முடியும் என்று நான் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. அதனால் எப்போதெல்லாம் சாத்தியப்படுகிறதோ அப்போதெல்லாம் ‘பீஸ்ட்’ படப்பிடிப்புக்குச் சென்று அங்கு நடக்கும் வேலைகளைக் கவனிப்பேன். இன்னும் எனக்கு அது ஆச்சரியத்தைத் தருகிறது. இவ்வாறு நடிகர் கவின் தெரிவித்துள்ளார்.

ஹிப் ஹாப் ஆதி பற்றி ரகசியத்தை சிவகுமாரின் சபதம் படத்தின் நடிகை