மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி ’பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க அண்மையில் பிரபல இயக்குனர் செல்வராகவன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

நடிகர் விஜய்யின் 65-வது படமான ‘பீஸ்ட்’ படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் இப்படத்தை இயக்குகிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் யோகி பாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் அண்மையில் பீஸ்ட் படத்தில் இயக்குனர் செல்வராகவன் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. செல்வராகவன் தற்போது சாணி காயிதம் என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த அறிவிப்பை தொடர்ந்து படத்தில் நடிகர் யோகி பாபு, விடிவி கணேஷ், லிலிபுட் ஃபரூக் ஆகிய மூவரும் இணைந்துள்ளதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது.

வட்டிக்கு வட்டி செலுத்துவதை எதிர்த்தே வழக்கு: நடிகர் சூர்யா தரப்பு விளக்கம்!
ஆனால் ஆரம்பத்தில் இயக்குனர் மிஷ்கினை தான் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார்களாம் படக்குழுவினர். மிஷ்கின் ‘பிசாசு 2’ பட பணிகளில் பிசியாக இருந்ததால், அவரால் பீஸ்ட் படத்திற்காக தேதிகள் ஒதுக்க முடியாமல் போனதாம். இதனை தொடர்ந்து தான் இயக்குனர் செல்வராகவனை வில்லனாக ஒப்பந்தம் செய்துள்ளனர் படக்குழுவினர்.

மிஷ்கின் தற்போது பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நமீதா கிருஷ்ணமூர்த்தி, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. அண்மையில் வெளியான ‘பிசாசு 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.