ஹைலைட்ஸ்:

  • மெர்சிடீஸ் கார் வாங்கிய துல்கர் சல்மான்
  • ரூ. 2.5 கோடிக்கு கார் வாங்கிய துல்கர் சல்மான்

மலையாள நடிகர் மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மான் மல்லுவுட் தவிர்த்து கோலிவுட், டோலிவுட், பாலிவுட்டிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ரசிகர்களை விட ரசிகைகள் தான் அதிகம். துல்கர் சல்மானுக்கு கார்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.

இந்நிலையில் அவர் ரூ. 2.5 கோடி மதிப்புள்ள மெர்சிடீஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி காரை வாங்கியுள்ளார். அவர் கார் வாங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

தந்தை மம்மூட்டியை போன்றே துல்கரும் கார் பிரியர். மம்மூட்டியிடம் சுமார் 369 கார்கள் இருக்கிறது. மாருதி 800, ஜாக்குவார், பிஎம்டபுள்யூ, லேண்ட் க்ரூசர், ஆடி 17 அதில் அடக்கம்.

துல்கர் சல்மானிடம் மினி கூப்பர், பிஎம்டபுள்யூ3, பிஎம்டபுள்யூ18 உள்பட பல விலை உயர்ந்த கார்கள் இருக்கிறது. படங்களில் நடிப்பதுடன் தயாரிக்கவும் செய்கிறார்.

துல்கர் சல்மான் தற்போது ஹனு ராகவபுடி இயக்கத்தில் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். அவரின் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதி துல்கரின் கதாபாத்திரம் தொடர்பான போஸ்டரை வெளியிட்டனர். இன்னும் பெயர் வைக்காத அந்த படத்தில் ராணுவ வீரராக நடிக்கிறார் துல்கர்.

துல்கர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தேசிங் பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். அந்த படத்தை பார்த்துவிட்டு தேசிங் பெரியசாமியை ரஜினி பாராட்டியிருந்தார். இந்நிலையில் அண்ணாத்த படத்தை அடுத்து தேசிங் பெரியசாமி இயக்கத்தில் தான் ரஜினி நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஆபரேஷன் முடிந்த கையோடு லெஃப்ட் அன்ட் ரைட் விட்ட யாஷிகா: யாரை தெரியுமா?