ஹைலைட்ஸ்:

  • புனீத் ராஜ்குமாரின் சமாதியில் அஞ்சலி செலுத்திய விஷால்
  • புனீத் வீட்டிற்கு சென்ற விஷால்

கன்ன சூப்பர் ஸ்டாரான புனீத் ராஜ்குமார் அக்டோபர் 29ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். ஃபிட்டாக இருந்த புனீத் இப்படி திடீர் என்று இறந்ததை யாராலும் ஏற்க முடியவில்லை.

அவர் தன் கண்களை தானம் செய்தார். அதன் மூலம் நான்கு பேருக்கு பார்வை கிடைத்திருக்கிறது. பெங்களூரில் இருக்கும் கண்டீரவா ஸ்டுடியோஸில் புனீத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் பெங்களூருக்கு சென்ற நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் புனீத்தின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

மேலும் புனீத் வீட்டிற்கு சென்று அவரின் அண்ணன் சிவராஜ்குமார் உள்ளிட்டோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 1,800 பிள்ளைகளுக்கு புனீத் ராஜ்குமார் இலவச கல்வி வழங்கி வந்தார். இனி அந்த 1,800 பேரின் கல்விக்கு நான் பொறுப்பு என்று எனிமி பட விழாவில் தெரிவித்தார் விஷால்.

மேலும் ஹைதராபாத்தில் ஒரு மரக்கன்றை நட்டு வைத்து அதற்கு புனீத் ராஜ்குமார் என்று பெயர் வைத்தார். முன்னதாக சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சூர்யா, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் புனீத்தின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்க்காத என்னென்னமோ நடந்துடுச்சு: பட வாய்ப்பை இழந்த நயன்தாரா