ஹைலைட்ஸ்:

  • ஜேசன் சஞ்சய்யின் டான்ஸ் வீடியோ வைரல்
  • ஜேசன் சஞ்சய்யின் செல்ஃபியை ஷேர் செய்யும் விஜய் ரசிகர்கள்
  • அடிக்கடி டிரெண்ட் ஆகும் ஜேசன் சஞ்சய்

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் உள்ள திரைப்பட கல்லூரியில் படித்து வந்தார். கடந்த சில நாட்களாக ஜேசன் பற்றி தான் சமூக வலைதளங்களில் பேச்சாக இருக்கிறது.

கண்டமேனிக்கு வைரலான விஜய் மகனின் வீடியோ: அட்வைஸ் பண்ணும் ரசிகர்கள்பாட்டு கேட்டுக் கொண்டே ஜேசன் கார் ஓட்டிச் சென்ற வீடியோ கடந்த வாரம் வெளியானது. அதை பார்த்த ரசிகர்கள், கார் ஓட்டும் போது கவனம் தேவை, பத்திரம் தம்பி என்று அறிவுரை வழங்கினார்கள்.
இந்நிலையில் ஜேசன் தன் தோழி மற்றும் தோழனுடன் காருக்குள் டான்ஸ் ஆடும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். மேலும் ஜேசனின் செல்ஃபி ஒன்றும் வெளியாகி வைரலாகியிருக்கிறது.
ஜேசன் டான்ஸ் ஆடியதை பார்த்த விஜய் ரசிகர்களோ, புலிக்கு பிறந்தது பூனையாகுமா. விஜய்ணா மாதிரி யாராலும் டான்ஸ் ஆட முடியாது. அப்படி இருக்கும்போது அவர் மகன் டான்ஸ் ஆடியதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. ஜேசன் உங்களை பெரிய திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

ஜேசனுக்கு இயக்குநராக வேண்டும் என்று ஆசையாம். எந்த இயக்குநருக்கும் விஜய்யை வைத்து ஒரு படமாவது எடுக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதற்கு ஜேசன் சஞ்சய் ஒன்றும் விதிவிலக்கு அல்ல. ஆனால் அதற்கு முன்பு பிற இயக்குநர்களிடம் உதவியாளராக வேலை செய்து அனுபவசாலியாக விரும்புகிறாராம்.
சூப்பர் ஹிட் பட ரீமேக்கில் ஹீரோ விஜய் மகன், ஹீரோயின் விஜய் சேதுபதி ‘மகள்’: இது எப்படி இருக்கு?ஜேசன் இப்படி ஒரு கணக்கு போட, விஜய் ரசிகர்களோ அவரை ஹீரோவாக பார்க்க ஆசைப்படுகிறார்கள். முன்னதாக உப்பேனா படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜேசனை நடிக்க வைக்க விஜய் சேதுபதி விரும்புவதாக தகவல் வெளியானது. அந்த தகவல் உண்மையாக இருக்க வேண்டும் என்பதே விஜய் ரசிகர்களின் விருப்பம்.

கெரியரை பொறுத்தவரை விஜய்யோ, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. கொரோனா வைரஸ் பிரச்சனையால் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை துவங்க முடியவில்லை.

இந்நிலையில் தளபதி 66 படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்குவது உறுதியாகிவிட்டது. அந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.