‘ஜகமே தந்திரம்’ படத்தை தொடர்ந்து தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாறன்’ படத்தில் நடித்துள்ளார் தனுஷ். இதனை தொடர்ந்து அடுத்ததாக மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் தனுஷ், மாளவிகா மோகனன் இருவரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாறன். கார்த்திக் நரேன் இயக்கி வரும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு அண்மையில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதுமாக நிறைவடைந்துள்ளது.

மாறன் படத்தை தொடர்ந்து மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் தனுஷ். ஏற்கனவே, மித்ரன் இயக்கத்தில் யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் உள்ளிட்டப் படங்களில் தனுஷ் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. இந்த பூஜையில் தனுஷ், பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

படப்பிடிப்பு தளத்தில் விபரீதம்: இயக்குநர் சேரனுக்கு தலையில் காயம்!
D44 என தற்காலிமாக தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிக்க பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். நீண்ட இடைவேளைக்கு பின் தனுஷ், அனிருத் கூட்டணி இந்த படத்தில் இணைந்து பணிபுரிய உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. மேலும் இன்று மாலை இந்த படத்தின் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. இந்தப் படத்துக்குப் பிறகு இயக்குனர் செல்வராகவன், சேகர் கம்முலா, மாரி செல்வராஜ் ஆகியோர் இயக்கங்களில் தலா ஒரு படங்களில் தனுஷ் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.