ஹைலைட்ஸ்:

  • பிக் பாஸ் 15 வீட்டில் ரகளை
  • ஆகாசா சிங்கை எட்டி உதைத்த அஃப்சானா கான்

சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் இந்தி நிகழ்ச்சியின் 15வது சீசனில் சர்ச்சைகளுக்கு குறைவே இல்லாமல் இருக்கிறது. ப்ரதிக் செஹஜ்பல் கோபப்பட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்ததுடன், வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தினார்.

இந்நிலையில் டாஸ்கின்போது பாடகி அஃப்சானா கான் சக போட்டியாளரான பாடகி ஆகாசா சிங்கை தாக்கியிருக்கிறார். ஆகாசாவை எட்டி உதைத்ததுடன் அவரின் சட்டை பட்டனை கழற்றி அசிங்கப்படுத்தியிருக்கிறார்.

கேமரா முன்பு என் சட்டை பட்டனை கழற்றி உள்ளாடை எல்லாம் தெரிந்துவிட்டது என்று ஆகாசா வருத்தப்பட்டார். அதற்கு அஃப்சானாவோ, இதற்கு முன்பும் கூட உன் உள்ளாடை வெளியே தெரிந்திருக்கிறது என்றார்.

akasa singh

அதோடு நிற்காமல் மீண்டும் ஆகாசாவை உடையை பிடித்து இழுத்தார் அஃப்சானா. தயவு செய்து என் உடையை கிழிக்காதே என்று ஆகாசா தெரிவித்தார். அப்படியும் அஃப்சானா நிறுத்திக்கொள்ளவில்லை. அவரின் செயலை பார்த்து பிக் பாஸ் பார்வையாளர்கள் முகம் சுளித்தனர்.

அஃப்சானா தன் தவறுகளை ஒருபோதும் ஏற்பது இல்லை என்று சக போட்டியாளரான ஷமிதா ஷெட்டி கூறினார். அதற்கு அஃப்சானாவோ, அதை சொல்ல நீ யார் என்று கேட்டார். மேலும் ஷிமாத மீது செருப்பை வீசினார் அஃப்சானா.பிக் பாஸ் வீட்டில் பயங்கர சண்டை: ஜன்னல், பொருட்களை அடித்து நொறுக்கிய போட்டியாளர்கள்