ஹைலைட்ஸ்:

  • சபாபதி படத்தில் நடித்திருக்கும் வைஷ்ணவி அருள்மொழி
  • சந்தானம் படம் மூலம் கோலிவுட் வந்த வைஷ்ணவி

சந்தானம், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் சபாபதி படம் இன்று ரிலீஸாகியிருக்கிறது.

அந்த படத்தில் சந்தானத்தின் தங்கையாக நடித்திருக்கிறார் வைஷ்ணவி அருள்மொழி. கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான மலர் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வந்தார் வைஷ்ணவி.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சீரியல்கள் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றிருக்கும் வைஷ்ணவி தற்போது பெரியதிரைக்கும் சென்றுவிட்டார்.

சபாபதி படம் பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

பார்க்க ஹீரோயின் மாதிரி இருக்கிறீர்கள். இந்நிலையில் அவசரப்பட்டு ஹீரோவுக்கு தங்கையாக நடித்துவிட்டீர்களே.

சும்மாவே சின்னத்திரை பிரபலங்களுக்கு படங்களில் சிறு கதாபாத்திரம் தான் கிடைக்கும். நீங்கள் வேறு தங்கையாக என்ட்ரி கொடுத்து பெரிய தவறு செய்துவிட்டீர்கள்.

இனி உங்களை ஹீரோயினாக அல்ல மாறாக தங்கையாக தான் பார்க்கும் கோலிவுட் என்று தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு உனக்கும், அனுஷ்காவுக்கும் நிச்சயமாகிடுச்சாமே?: சமந்தா மாஜி கணவரை கேட்ட அப்பாஇதற்கிடையே சந்தானத்துடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற புகழின் ஆசை நிறைவேறியிருக்கிறது. தனக்கு முதல் கடவுளையும், முதல் வாய்ப்பையும் தந்தது சந்தானம் அண்ணன் தான் என சபாபதி பட செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார் புகழ்.