ஹைலைட்ஸ்:

  • சென்னையில் நடக்கும் மாநாடு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி
  • எஸ்.ஜே. சூர்யாவிடம் சாரி சொன்ன பாரதிராஜா

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர், ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்த மாநாடு படம் நவம்பர் 25ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.

இந்நிலையில் மாநாடு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடந்து வருகிறது. நிகழ்ச்சியில் மாநாடு ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. வர்றேன் திரும்ப வர்றேன் என்று அதில் சிம்பு வசனம் பேசியிருக்கிறார்.

நிகழ்ச்சியில் பேசிய பாரதிராஜா கூறியதாவது,

சிம்பு அற்புதமான குழந்தை. லவ்லி பாய். அவனுடன் சேர்ந்து வேலை செய்யும்போது நானும், அவனும் ஈக்வல் மாதிரி நினைச்சுக்குவேன்.

ஒரு நல்ல சூழலில் அற்புதமான படைப்பு இந்த மாநாடு என்றார்.

பாரதிராஜாவை அடுத்து எஸ்.ஏ. சந்திரசேகர் பேசினார். அவர் பேசி முடித்ததும் மீண்டும் மைக் அருகே வந்து பாரதிராஜா கூறியதாவது,

எஸ்.ஜே. சூர்யா லயோலா கல்லூரியில் படித்தான் என்று எனக்கு தெரியாது. அவன் ஒரு எழுத்தாளன் என்றே தெரியாது. அவனுடைய படங்களை பார்த்தேன். ராஸ்கல். அந்த வில்லனை அதற்கு மேல் சொல்ல முடியாது. அவன் ஸ்டைல், பாடி லேங்குவேஜ் அருமை. இதை முன்பே சொல்ல மறந்துவிட்டேன். பெரிய தவறு செய்துவிட்டேன், சாரிடா என்றார்.

Ajith: அஜித்துக்கு தொல்லை கொடுக்கும் விஜய் சேதுபதி?