ஹைலைட்ஸ்:

  • பைக் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த சஞ்சாரி விஜய்
  • சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சஞ்சாரி விஜய்
  • சஞ்சாரி விஜய்யின் உடல் உறுப்புகள் தானம்

நான் அவனள்ள அவளு கன்னட படத்தில் திருநங்கையாக நடித்து அசத்தியதற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவர் சஞ்சாரி விஜய். அவர் நேற்று முன்தினம் இரவு 11.45 மணி அளவில் தன் நண்பர் நவீனுடன் பைக்கில் மருந்துக்கடைக்கு சென்றார்.

பிரபல நடிகர் பைக் விபத்தில் சிக்கி படுகாயம்: நிலைமை மிகவும் கவலைக்கிடம்அப்பொழுது பைக் ஸ்கிட் ஆகிய விபத்தில் விஜய்க்கு கால் மற்றும் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

கோமாவில் இருந்த அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. விஜய்யின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் உயிரிழந்தார். அவருக்கு வயது 38.

லாக்டவுன் நேரத்தில் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள், மருந்துகள் வாங்கி கொடுத்து உதவி செய்து வந்தார் விஜய் என்பது குறிப்பிடித்தக்தது. விஜய்யின் மரண செய்தி அறிந்து கன்னட திரையுலகினரும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விஜய்க்கு மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தார் முடிவு செய்தனர். இது குறித்து விஜய்யின் சகோதரர் சித்தேஷ் கூறியதாவது,

விஜய்யின் உடல் உறுப்புகளை தானம் செய்யப் போகிறோம். சமூகத்திற்கு சேவை செய்வதில் சந்தோஷப்பட்டவர் விஜய். அதனால் அவரின் உறுப்புகளை தானம் செய்கிறோம் என்றார்.

பிரபல கன்னட நடிகரான கிச்சா சுதீப் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
சஞ்சாரி விஜய் இறந்த செய்தி அறிந்து மிக மிக வேதனை அடைந்தேன். இந்த லாக்டவுனுக்கு முன்பு இரண்டு முறை அவரை சந்தித்தேன். ரிலீஸுக்கு தயாராக இருக்கும் தன் அடுத்த படம் குறித்து சந்தோஷப்பட்டார். அவரின் குடும்பத்தார், நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.