மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்‘ படத்தை இந்திய சினிமாவே எதிர்பார்த்து வருகிறது. எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புகழ்பெற்ற நாவலான ‘பொன்னியின் செல்வன்’ கதை அதே பெயரில் படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் யார் யார் எந்தெந்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் ‘பொன்னியன் செல்வன்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தப்படத்தை பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாக்குகிறார் இயக்குனர் மணிரத்னம்.

மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அண்மையில் மீண்டும் துவங்கியது. இந்நிலையில் இந்தப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று அண்மையில் வெளியானது. உள்ளது. ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் அடுத்த வருடம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர் படக்குழுவினர்.

தலைவருடன் நடிக்கும் கனவு நனவானது: நெகிழ்ச்சியுடன் ட்விட்டரில் நன்றி தெரிவித்த நடிகர் சதீஷ்!
இந்நிலையில் இந்த படத்தில் யார் என்னனென்ன கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்ற பட்டியல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இணையத்தில் வெளியாகியுள்ள இந்த பட்டியலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதித்ய கரிகாலனாக விக்ரம், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி, வானதியாக ஷோபிதா, பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், கடம்பூர் சம்புவரையராக நிழல்கள் ரவி, மலையமானாக லால், ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம், அநிருத்த பிரம்மராயராக பிரபு, சோமன் சாம்பவனாக ரியாஸ் கான், ரவிதாசனாக கிஷோர், சேந்தனாக அமுதன் – அஸ்வின், கந்தன் மாறனாக விக்ரம் பிரபு, மதுராந்தகனாக அர்ஜுன் சிதம்பரம், பார்த்திபேந்திர பல்லவனாக ரஹ்மான், குடந்தை ஜோதிடராக மோகன்ராம் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.