ஹைலைட்ஸ்:

  • சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் முதலாம் ஆண்டு நினைவு தினம்
  • சுஷாந்த் மரணத்திற்கு நீதி கேட்கும் ரசிகர்கள்
  • சுஷாந்தை நினைத்து ஃபீல் பண்ணும் பிரபலங்கள், ரசிகர்கள்

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு சென்று முன்னணி நடிகரானவர் சுஷாந்த் சிங் ராஜ்புட். காட்ஃபாதர் இல்லாமலும், யார் வாரிசுமாக இல்லாமலும் அவர் வெற்றி பெற்று வந்தார். கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிக்கவில்லை மாறாக தோனியாகவே வாழ்ந்திருந்தார்.

இந்நிலையில் தான் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி மும்பையில் இருக்கும் தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. சுஷாந்தின் மரணம் தற்கொலை அல்ல கொலை என்று பாலிவுட்டை சேர்ந்த சிலரும், ரசிகர்களும் இன்னும் கூறி வருகிறார்கள்.

சுஷாந்தின் கொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறி அவரின் ரசிகர்கள் அவ்வப்போது ஏதாவது ஒரு ஹேஷ்டேகை ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாக விடுகிறார்கள்.

சுஷாந்த் இறந்த பிறகு பாலிவுட்டில் போதைப் பொருள் பயன்படுத்தும் பலரை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினார்கள், நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் சுஷாந்த் இறந்து இன்றுடன் ஓராண்டு ஆகிவிட்டது. இதையடுத்து #SushantSinghRajput என்கிற ஹேஷ்டேகுடன் அவரின் ரசிகர்கள் ட்வீட் செய்து வருகிறார்கள்.
சுஷாந்த் இறந்துவிட்டார் என்பதையே நம்ப முடியவில்லை, ஆனால் அதற்குள் ஓராண்டு ஆகிவிட்டது என்று திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தெரிவித்துள்ளனர்.
தோனி படத்தில் சுஷாந்த் நடித்த சில காட்சிகளை ட்விட்டரில் வெளியிட்டு அவர் நடிப்பை பலரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். சுஷாந்த் கடைசியாக நடித்த தில் பேச்சாரா அவர் இறந்த பிறகு ஓடிடியில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.

அந்த படத்தில் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகராக நடித்திருந்தார். தில் பேச்சாரா படத்தை பார்த்த ரஜினி ரசிகர்கள் சுஷாந்தை நினைத்து ஃபீல் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த நடிகை என் கணவரை என்னிடம் இருந்து பிரித்துவிட்டார்: கவிதாவின் வைரல் வீடியோ