ஹைலைட்ஸ்:

  • தமிழ் ராக்கர்ஸில் கசிந்த அரண்மனை 3
  • இன்று தியேட்டர்களில் ரிலீஸான அரண்மனை 3

சுந்தர் சி. இயக்கத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த அரண்மனை 3 படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது. அரண்மனை போன்று பயங்கர காமெடியாக இல்லாவிட்டாலும் ரசிக்கும்படி இருக்கிறது என்று படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரண்மனை 3 விமர்சனம்

ஆர்யா தான் ஹீரோ என்று சொல்லிவிட்டு படத்தில் அவர் ஒரு சில காட்சிகளில் தான் வருகிறார். இதற்கு பெயர் ஹீரோ இல்லை கௌரவத் தோற்றம் என்று ஆர்யா ரசிகர்கள் ஒரு பக்கம் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் படம் ரிலீஸான சில மணிநேரத்தில் அதை ஆன்லைனில் கசியவிட்டுவிட்டது தமிழ் ராக்கர்ஸ். பண்டிகை காலம் என்பதால் வார இறுதி நாட்களில் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கலாம் என்று நினைத்தவர்கள் கூட தமிழ் ராக்கர்ஸில் படம் பார்த்துவிடுவார்கள்.

மேலும் கொரோனாவுக்கு பயந்து தியேட்டருக்கு செல்ல விரும்பாதவர்களும் தமிழ் ராக்கர்ஸ் பக்கம் திரும்பிவிடுவார்கள். இதனால் படத்தை எடுத்தவர்களுக்கு தான் நஷ்டம்.

எந்த படம் ரிலீஸானாலும் உடனுக்குடன் அதை கசியவிடுகிறது தமிழ் ராக்கர்ஸ். முன்னதாக அக்டோபர் 9ம் தேதி வெளியான சிவகார்த்திகேயனின் டாக்டர் படமும் தமிழ் ராக்கர்ஸில் கசிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலா இயக்கத்தில் நடிக்க ஆசை : நடிகர் சியாம்!