ஹைலைட்ஸ்:

  • பதட்டமாகி அதிகாரிகளிடம் தானாக சிக்கிய ஆர்யன் கான்
  • போதைப் பொருள் வழக்கில் ஆர்யன் கான் கைது

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் மும்பையில் இருந்து கோவா கிளம்பிய கப்பலில் நடந்த போதை பார்ட்டியில் கலந்து கொண்டார். அப்பொழுது அங்கு ரெய்டு வந்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் சிக்கினார்.

ஆர்யன் கானை தங்கள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று 7 மணிநேரம் விசாரணை நடத்தினார்கள். அதன் பிறகு அவர் கைது செய்யப்பட்டு போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவலில் வைக்கப்பட்டார்.

கப்பலில் போதை பார்ட்டி: அட்லி பட ஹீரோ ஷாருக்கானின் மகன் கைது

இந்நிலையில் ஆர்யன் கான் சிக்கியது எப்படி என்று தெரிய வந்திருக்கிறது. கப்பலில் போதைப் பார்ட்டி நடப்பது குறித்து அறிந்து அதிகாரிகள் மாறுவேடத்தில் அங்கு சென்றிருக்கிறார்கள்.

மாறு வேடத்தில் இருந்த அதிகாரிகளில் சிலர் கப்பலில் ஏறிவிட்டனர். சிலர் கரையில் நின்றிருக்கிறார்கள். கப்பலுக்கு வருவோரில் யாரிடமாவது வித்தியாசம் தெரிகிறதா என்று அதிகாரிகள் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

அப்பொழுது அங்கு வந்த ஆர்யன் கான் மற்றும் அவரின் நெருங்கிய நண்பரான நடிகர் அர்பாஸ் மெர்சென்டிடம் கப்பல் ஊழியர்கள் வழக்கமான பரிசோதனை செய்திருக்கிறார்கள். சோதனையின்போது ஆர்யன் கான் பதட்டமாகிவிட்டாராம். அதை பார்த்து தான் அதிகாரிகள் உஷாராகியிருக்கிறார்கள்.

அதன் பிறகு அர்பாஸின் காலணிகளை சோதனை செய்தபோது அதில் போதைப் பொருள் இருந்தது. இதையடுத்து ஆர்யன் மற்றும் அர்பாஸை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.