ஹைலைட்ஸ்:

  • பாபநாசம் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்கிறாரா மீனா?
  • பாபநாசம் 2 எடுக்கவில்லை- ஜீத்து ஜோசப்
  • விக்ரம் படத்திற்கு தயாராகி வரும் கமல் ஹாசன்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்த த்ரிஷ்யம் 2 படம் அண்மையில் அமேசான் பிரைமில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இதையடுத்து த்ரிஷ்யம் 2 படத்தை வெங்கடேஷை வைத்து தெலுங்கில் ரீமேக் செய்து முடித்திருக்கிறார் ஜீத்து ஜோசப்.

தெலுங்கை அடுத்து தமிழில் கமல் ஹாசனை வைத்து ரீமேக் செய்கிறார் என்று கூறப்பட்டது. த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் கமல் தான் நடித்திருந்தார். அந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக கவுதமி நடித்தார்.

இந்நிலையில் பாபநாசம் 2 படத்தில் கவுதமிக்கு பதில் மீனாவை நடிக்க வைக்கிறார்கள் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் இது குறித்து ஜீத்து ஜோசப் தரப்பிடம் கேட்டால், பாபநாசம் 2 படத்தை எடுக்கவில்லை. அது தொடர்பான பேச்சுவார்த்தை கூட நடத்தப்படவில்லை என்கிறார்கள்.

கமலுக்கு இப்போ அப்படி ஒரு ஐடியாவே இல்லையாம்: எல்லாமே பொய்யாம் கோப்ப்பால்கமலின் கவனம் எல்லாம் இந்தியன் 2 மற்றும் லோகேஷ் கனகராஜின் விக்ரம் படம் மீது தான் இருக்கிறதாம். இது தவிர்த்து பிக் பாஸ் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் கமல். அவர் தற்போதைக்கு புதுப்படங்கள் எதிலும் கமிட்டாகவில்லையாம்.

கமல், ஜீத்து ஜோசப் முடிவு செய்யாத ஒரு படம் குறித்து மக்கள் தீவிரமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் விக்ரம் படத்திற்கு முன்பே த்ரிஷ்யம் 2 ரீமேக்கில் கமல் நடிக்கிறார். ஒரு மாதத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு விக்ரம் ஷூட்டிங்கிற்கு வந்துவிடுவார் என்றெல்லாம் கூறப்பட்டது.