உலக நாயகன் கமலின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், தென்னிந்திய திரையுலகில் பிஸியான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ்,தெலுங்கு, இந்தி மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் ஸ்ருதி,தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிய போது, சில கிண்டலான கேள்விகளுக்கும் ஜாலியாக பதிலளித்துள்ளார்.

தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற பிங்க் திரைப்படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை, தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வக்கீல் சாப் என்ற பெயரில் ரிலீஸ் ஆனது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன். மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்த ‘லாபம்’ படமும் அண்மையில் ரிலீஸ் ஆனது.

சோஷியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக விளங்கும் ஸ்ருதிஹாசன், தனது ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்கள், லேட்டஸ்ட் ஃபேஷன் நகை மற்றும் உடை என பல கிராமரான ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் அடிக்கடி பகிர்ந்து லைக்குகளை குவித்து வருகிறார். சோஷியல் மீடியாவில் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது.

‘பீஸ்ட்’ படத்துக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை – கவின் விளக்கம்!

இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர்களிடம் ஸ்ருதி உரையாடிய போது, நெட்டிசன் ஒருவர் உங்கள் போன் நம்பர் தாருங்கள் என கேட்டுள்ளார். அதற்கு, 100 என நக்கலாக பதிலளித்துள்ளார் ஸ்ருதி. அவரின் இந்த பதிலுக்கு லைக்குகளும், கமெண்ட்களும் குவிந்து வருகிறது. இணையத்தளவாசிகள் பலரையும் ஸ்ருதிஹாசனின் குறும்பானபதில் கவர்ந்துள்ளது.

ஸ்ருதிஹாசன் அடுத்ததாக பிரபாஸ் ஜோடியாக ‘சலார்’ படத்தில் நடித்து வருகிறார். கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் 2 படங்களை இயக்கிய பிரஷாந்த் நீல் இயக்கத்தில் சலார் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போனி கபூர் இங்கே..!! வலிமை அப்டேட் எங்கே.! – ஏர்போர்ட்டில் ரசிகர்கள் உற்சாகம்