விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு சிம்பு, கெளதம் மேனன் மூன்றாவது முறையாக இணையும் படத்திற்கு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என தலைப்பிடப்பட்டது. அதனை தொடர்ந்து படத்தின் டைட்டில் பாரதியாரின் கவிதை வரிகளான ‘வெந்து தணிந்தது காடு‘ என மாற்றப்பட்டு சிம்புவின் மிரட்டலான தோற்றம் பர்ஸ்ட் லுக்காக வெளியானது.

வருண் நடிப்பில் ‘ஜோஷ்வா’ படத்தை இயக்கி முடித்துள்ளார் கெளதம் மேனன். இந்த படத்தை தொடர்ந்து தற்போது சிலம்பரசன் நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களையுமே வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக சிம்பு, கெளதம் கூட்டணிக்கு இசையமைக்கவுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

சிம்பு, கெளதம் மேனன் இணையும் படத்திற்கு ஆரம்பத்தில் நதிகளிலே நீராடும் சூரியன் என்ற தலைப்பிட்டிருந்தனர். அதன்பின்னர் படத்தின் டைட்டிலை மாற்றிபாரதியாரின் கவிதை வரிகளான ‘வெந்து தணிந்தது காடு’ என பெயர் வைத்துள்ளனர். அத்துடன் படத்தின் பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இந்நிலையில் இந்த படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய்க்கு வில்லனாகும் செல்வராகவன்: வெயிட்டான அப்டேட் வெளியிட்ட ‘பீஸ்ட்’ படக்குழுவினர்!
பர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றுள்ள சிம்புவின் மிரட்டலான தோற்றம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த படத்திற்காக 15 கிலோ எடையை குறைந்து சிறு வயது பையன் லுக்கில் பர்ஸ்ட் லுக்கில் மிரட்டியிருந்தார். இதுவரை சிம்பு ஏற்று நடித்திடாத கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படத்தில் சிம்பு அம்மாவாக ராதிகா சரத்குமார் நடிக்கிறார். இந்த படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதை எழுதுவது குறிப்பிடத்தக்கது.