ஹைலைட்ஸ்:

  • மகனுக்கு பெயர் வைத்த சிவகார்த்திகேயன்
  • மகனின் புகைப்படத்தை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன், ஆர்த்தி தம்பதிக்கு ஆராதனா என்கிற மகள் இருக்கிறார். இந்நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமான ஆர்த்தி ஜூலை 12ம் தேதி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

மகன் தன் விரலை பிடித்ததை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு சிவகார்த்திகேயன் கூறியதாவது, 18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம் என்றார்.

இந்நிலையில் தன் செல்ல மகனுக்கு பெயர் வைத்தது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். மகனுக்கு முத்தம் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு, எங்கள் அன்பு மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..உங்கள் அன்போடும் ஆசியோடும்
“குகன் தாஸ்” என பெயர்சூட்டியிருக்கிறோம் என தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
அவரின் அப்பாவின் பெயர் தாஸ். அப்பாவே மகனாக வந்திருப்பதால் ஜூனியருக்கும் தாஸ் என்று பெயர் வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயனின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் குகன் தாஸை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

தான் பெரிய ஆளாகி பிரபலமாக இருப்பதை பார்க்க அப்பா உயிருடன் இல்லையே என்று சிவகார்த்திகேயன் இத்தனை ஆண்டுகளாக கலங்கினார். இந்நிலையில் அப்பா மீண்டும் வந்துவிட்டார்.

அடப்பாவமே, கல்யாணம் முடிந்த மறுநாளே சினேகன் வாழ்க்கையில் இப்படி ஒரு திருப்பமா!