ஹைலைட்ஸ்:

  • மகிழ் திருமேனி படத்தின் ஷூட்டிங்கில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு
  • புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடந்து வரும் படப்பிடிப்பு

சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் மகிழ் திருமேனி இயக்கதத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். சென்னையில் பலகட்ட படப்பிடிப்பி நடந்தது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் மக்கள் பணியில் பிசியாகிவிட்டதால் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியவில்லை. இதையடுத்து படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தார்கள்.

இந்நிலையில் மீண்டும் படப்பிடிப்பு தளத்திற்கு திரும்பியுள்ளார் உதயநிதி. படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடந்து வருகிறது.

70 சதவீத காட்சிகளை படமாக்கிவிட்டனர். உதயநிதி ஸ்டாலின் ஆர்டிகிள் 15 ரீமேக் ஷூட்டிங்கை மீண்டும் தொடர்வதற்குள் மீதமுள்ள காட்சிகளை படமாக்க முடிவு செய்துள்ளார் மகிழ் திருமேனி.

udhayanidhi

இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து வருகிறார். சிம்புவின் ஈஸ்வரன், ஜெயம் ரவியின் பூமி படங்கள் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர் நிதி.

ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இந்த படத்திற்கு ஆரோல் கரோலி இசையமைக்கிறார். படத்தில் நடிப்பதுடன் தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் உதயநிதி.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் சைக்கோ. மிஷ்கின் இயக்கிய அந்த படத்தில் உதயநிதி பார்வையில்லாதவராக நடித்ததை பார்த்து ரசிகர்கள் மிரண்டுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தோழியை இழந்த யாஷிகாவுக்கு மேலும் ஒரு பெரும் இழப்பு