ஹைலைட்ஸ்:

  • புதுமணத் தம்பதிக்கு பெட்ரோலை பரிசளித்த மயில்சாமி
  • நாளுக்கு நாள் அதிகரிக்கும் பெட்ரோல் விலை

தினமும் காலையில் எழுந்தவுடன் பெட்ரோல், டீசல் விலையை பார்த்து வாகன ஓட்டிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். வாங்கும் சம்பளத்தில் பெட்ரோல், டீசலுக்கே அதிகம் செலவாகிறது என்று வேதனைப்படுபவர்கள் பலர்.

பெட்ரோல் என்பது தங்கம் போன்றாகிவிட்டது. நாளுக்கு நாள் விலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்று மக்கள் புலம்புகிறார்கள்.

இந்நிலையில் நகைச்சுவை நடிகர் மயில்சாமி திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அவர் மணமக்களுக்கு இரண்டு கேன் பெட்ரோலை பரிசாக கொடுத்தார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியிருக்கிறது.

mayilsamy

அந்த புகைப்படங்களை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

மணமக்களுக்கு விலை உயர்ந்த பொருளை பரிசாக அளித்திருக்கிறார். மயில்சாமி நிச்சயம் பெரிய பணக்காரர் தான். நல்ல பரிசு கொடுத்திருக்கிறார்.

இப்படி ஒரு வித்தியாசமான பரிசை கொடுத்தாலும் விலை மட்டும் குறையப் போவது இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

பெட்ரோலை பரிசாக கொடுத்தது பற்றி மயில்சாமி கூறியிருப்பதாவது,

பெட்ரோல் விலை உயர்வு குறித்த மக்களின் கோரிக்கையை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தவே இப்படி செய்தேன். பெட்ரோல் விலை மீதான வரியை குறைத்த தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற்கிறேன் என்றார்.

உடம்பில் ஏகப்பட்ட தையல்: மருத்துவமனையில் இருந்து யாஷிகா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ