Memes
oi-Jaya Chitra
சென்னை: அட்சயதிரிதியை கொண்டாட்டமாக நகைகள் வாங்குவது பற்றி பணம் உள்ளவர்கள் சிந்தித்துக் கொண்டிருக்க, இன்னும் சம்பளமே வரலை பாஸ் என இஎம்ஐயை நினைத்து நகத்தைக் கடித்துக் கொண்டிருப்பவர்கள், ஏதோ நம்மால் முடிந்தது என தங்கமான மீம்ஸ்கள் பலவற்றை இணையத்தில் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

சமீபகாலமாகத்தான் அட்சயதிரிதியை நாளில் தங்கம் வாங்கும் பழக்கம் நம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் வியாபாரத்தை கணக்கில் வைத்து வெளியிடப்படும் விளம்பரங்கள். அட்சயதிரிதியை நாளில் தங்கம் வாங்கினால் குடும்பத்திற்கு நல்லது.. இன்னும் தங்கம் அதிகம் சேரும்.. என்பன போன்ற விளம்பரங்கள் நிரம்பி வழிவதால் என்ன ஏது என்றே விசாரிக்காமல் மக்கள் கூட்டம் நகைக்கடைகளில் அலைபோதுவதை பார்க்க முடிகிறது.

ஆனால் இம்முறை அட்சயதிரிதியை பற்றி மக்களிடையே நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதை சமூகவலைதளங்களில் நிரம்பி வழியும் மீம்ஸ்களை பார்க்கும் போது உணர முடிகிறது. கொரோனா கொடுத்த அடியால் ஏற்கனவே பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்திருக்கும் நடுத்தர மக்களுக்கு, தங்கம் சேமிப்பா? அல்லது செலவா? என்ற தெளிவை ஏற்படுத்துகின்றன பல மீம்ஸ்கள்.

வழக்கம் போல் வெறும் கலாய் மீம்ஸ்களாக மட்டும் இல்லாம் சிந்தனையை தூண்டும்படியாக உலவி வரும் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக…

English abstract
Those are some idea frightening memes collections on Akshayathiruthiyai pageant 2022.
Tale first revealed: Tuesday, Would possibly 3, 2022, 13:01 [IST]