ஹைலைட்ஸ்:

  • மனைவியுடன் உறவு கொள்ளும்போது பாட்டு கேட்கும் நிக் ஜோனஸ்
  • படுக்கையறை ரகசியம் சொன்ன ப்ரியங்கா சோப்ராவின் கணவர்
  • மனைவியை பாராட்டும் நிக் ஜோனஸ்

விஜய்யின் தமிழன் படம் மூலம் நடிகையான ப்ரியங்கா சோப்ரா ஹாலிவுட் சென்ற இடத்தில் அமெரிக்காவை சேர்ந்த பாடகர் நிக் ஜோனஸை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணம் ஜெய்பூர் அரண்மனையில் நடந்தது. இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகு அவர் கணவருடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அண்மையில் தான் அவர் அங்கு உணவகம் ஒன்றை துவங்கினார். ப்ரியங்காவின் கணவர் பேட்டி ஒன்றில் தங்கள் படுக்கையறை ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.

மனைவியுடன் உறவு கொள்ளும் கேட்பதற்கு என்று பாடல்கள் வைத்திருக்கிறாராம் நிக். ஆனால் அதில் தான் பாடிய பாடல்கள் எதுவும் இல்லை என நிக் தெரிவித்துள்ளார்.

நிக் கூறியதை கேட்ட ரசிகர்களோ, மாம்ஸ் என்ன படுக்கையறையில் நடப்பதை பற்றி எல்லாம் பேசியிருக்கிறார் என கமெண்ட் அடித்துள்ளனர்.

நிக் ஜோனஸ் நேரம் கிடைக்கும்போது எல்லாம் தன் மனைவி ப்ரியங்காவை புகழ்ந்து பேசி கொண்டிருக்கிறார். என் பொண்டாட்டி போல யாரு மச்சான் என்று நிக் அடிக்கடி புகழ்வதை பார்க்கும் ரசிகர்கள், இவரு தான்யா மனைவி புகழ்பாடிக் கொண்டிருக்கும் அதிசய கணவர் என்கிறார்கள்.

இதற்கிடையே ப்ரியங்கா சோப்ரா தன் வாழ்க்கையை பற்றி எழுதிய Unfinished புத்தகத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த புத்தக்கத்தில் அவர் விஜய்யை பற்றி எழுதியிருந்ததை பார்த்த தளபதி ரசிகர்கள் குஷியாகிவிட்டனர்.

தன் அப்பாவுக்கு புற்றுநோய் ஏற்பட்டபோது அவரை உடனே சிகிச்சைக்காக லண்டன் அழைத்துச் செல்ல பிரபல பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் உதவி செய்தது குறித்தும் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார் ப்ரியங்கா.

இது தவிர்த்து பாலிவுட் படம் ஒன்றில் இயக்குநர் ஒருவர் தன்னை உள்ளாடை தெரியுமாறு ஆடச் சொன்னதையும் குறிப்பிட்டிருந்தார். அப்பொழுது சல்மான் கான் தான் தனக்கு உதவியாக கூறினார் ப்ரியங்கா என்பது குறிப்பிடத்தக்கது.

காதும் காதும் வைத்தது மாதிரி ரகசிய திருமணம் செய்த ஸ்ரீதேவி, டான்ஸ் நடிகை, ஹேன்ட்சம் ஹீரோ, வாரிசு நடிகர்