ஹைலைட்ஸ்:

  • மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட யாஷிகா
  • நர்ஸ் வீட்டில் தங்கியிருக்கும் யாஷிகா

நடிகை யாஷிகா தன் தோழி பவானி, நண்பர்கள் செய்யது, அமீர் ஆகியோருடன் கடந்த மாதம் 24ம் தேதி இரவு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பினார். அப்பொழுது அவர் ஓட்டி வந்த கார் விபத்தில் சிக்கியதில் பவானி உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த யாஷிகா சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூன்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 6 மாதங்களுக்கு யாஷிகாவால் நடக்க முடியாது, படுத்த படுக்கையாகத் தான் இருக்க வேண்டும்.

இந்நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் மருத்துவமனையில் இருந்து தன் வீட்டிற்கு செல்லவில்லை. வீட்டிற்கு சென்றால் பவானியின் நினைவாக இருக்கும் என்று தனக்கு நெருக்கமான நர்ஸ் ஒருவரின் வீட்டில் தங்கியிருக்கிறார்.

அமெரிக்காவில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்த்து வந்த பவானி தன் பெற்றோரை பார்க்க ஹைதராபாத் வந்தார். அப்படியே யாஷிகாவை பார்க்க சென்னை வந்த இடத்தில் தான் விபத்தில் சிக்கி பலியானார்.

பவானி இறந்து தான் உயிர் வாழ்வது குற்ற உணர்வாக இருப்பதாக யாஷிகா தெரிவித்துள்ளார். இனி இந்த குற்ற உணர்வுடன் தான் வாழ வேண்டும் என்று யாஷிகா வேதனைப்படுகிறார்.

தோழியை இழந்த யாஷிகாவுக்கு மேலும் ஒரு பெரும் இழப்புஇதற்கிடையே யாஷிகா எழுந்து நடக்க பல மாதங்களாகும் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்த இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் வேறு நடிகைகளை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார்கள்.