கடந்த நவம்பர் 14ம் தேதி இரவு டோனி பஞ்சாரா ஹில்ஸில் உள்ள கேபிஆர் பார்க் அருகே அடையாளம் தெரியாத நபர் நடத்திய தாக்குதலில் நடிகை ஷாலு சௌராசியா காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் டோலிவுட் சினிமாவில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

நடிகை ஷாலு செளராசியா கடந்த நவம்பர் 14ம் தேதி இரவு 8.30 மணியளவில் கேபிஆர் பார்க் அருகே வாக்கிங் சென்று கொண்டிருந்த போது அவரிடமிருந்த மொபைல் போன் பறிக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் போலீசில் அளித்துள்ள புகாரில், முதலில் ஒரு நபர் தன்னிடம் பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை ஒப்படைக்கும்படி கேட்டதாக அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஆனால் ஷாலு அதற்கு மறுப்பு தெரிவித்தபோது, அவர் முகத்தில் ஒருவன் குத்தியுள்ளான் மேலும், கல்லால் தாக்க முயன்றுள்ளான். பின்னர் ஷாலுவின் மொபைல் போனை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். இதனால தலை மற்றும் கண் அருகில் பலத்த காயம் அடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதன்முறையாக குத்தாட்டப் பாடலில் கவர்ச்சி நடனம்: சமந்தாவின் அதிரடி முடிவு!
நடிகையின் புகாரின் பேரில் பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்திய நபரை அடையாளம் காண அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

தெலுங்கானாவில் கேபிஆர் பூங்காவிற்கு பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் காலை அல்லது மாலை நடைப்பயிற்சிக்காக அடிக்கடி வந்து செல்கின்றனர். இந்த பூங்காவை சுற்றி கடந்த காலங்களில் பல செயின் பறிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புனித் சார் இறப்பால் நான் இன்னும் ‘ஷாக்’ல தான் இருக்கேன்!