ஹைலைட்ஸ்:

  • விஜய் சேதுபதியை விளாசும் நெட்டிசன்ஸ்
  • ராஜ், டிகேவின் வெப்தொடரில் நடிக்கும் விஜய் சேதுபதி

ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் மனோஜ் பாஜ்பாய், சமந்தா நடிப்பில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப்தொடரில் தமிழர்களை தீவிரவாதிகள் போன்று சித்தரித்ததாகக் கூறி கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த தொடரை உடனே நீக்க வேண்டும் என்று அமேசான் பிரைம் நிறுவனத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் எழுதினார்.

இந்நிலையில் ராஜ் மற்றும் டிகே இயக்கும் புதிய இந்தி வெப்தொடரில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அந்த தொடரில் பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் தான் ஹீரோ, விஜய் சேதுபதி தான் வில்லன். ராஷி கன்னாவும் நடிக்கிறார்.

தமிழர்களை அவமதித்த ராஜ் மற்றும் டிகே இயக்கும் தொடரில் போய் நடிக்கலாமா விஜய் சேதுபதி என்று ரசிகர்களும், சமூக வலைதளவாசிகளும் கேள்வி எழுப்பியுள்ளனர். சர்ச்சையை தேடிச் செல்வதையே வழக்கமாக வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி. முன்னதாக இலங்கையை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனாக நடிக்க ஒப்புக் கொண்டார்.

தற்போது தி ஃபேமிலி மேன் 2 தொடரை இயக்கியவர்களுடன் சேர்ந்து வேலை பார்க்கிறார். விஜய் சேதுபதி இப்படி சர்ச்சை பிரியராக இருப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ராஜ், டிகே கேட்டபொழுதே நடிக்க முடியாது என்று கூறியிருக்க வேண்டும் என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.

முன்னதாக விஜய் சேதுபதி, ஷாஹித் கபூர் நடித்து வரும் தொடர் தி ஃபேமிலி மேன் 3 என்று கூறப்பட்டது. ஆனால் அது தி ஃபேமிலி மேன் 3 இல்லையாம், புதுக்கதை என்பது பின்னர் தெரிய வந்தது.

ஆபரேஷன் முடிந்த கையோடு லெஃப்ட் அன்ட் ரைட் விட்ட யாஷிகா: யாரை தெரியுமா?