தன் முன்னாள் காதலியான தீபிகா படுகோனை பாராட்டி பேசியிருக்கிறார் சித்தார்த் மல்லையா.

காதல்

சர்ச்சை தொழில் அதிபரான விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த்தும், பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனும் ஒரு காலத்தில் காதலித்தார்கள். ஐபிஎல் போட்டி நடந்தபோது அவர்கள் முத்தம் கொடுத்தது அப்பொது பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பிறகு அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். காதல் முறிந்தாலும் தொடர்ந்து நண்பர்களாக இருக்கிறார்கள்.

சித்தார்த்

சித்தார்த் மல்லையா ‘If I’m Honest’ என்கிற பெயரில் சுயசரிதை எழுதியிருக்கிறார். அந்த புத்தக ரிலீஸுக்கு முன்பு சித்தார்த் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, மனநலம் பற்றி தீபிகா பேசி வருவது பாராட்டுக்குரியது. அவரும், பிறரும் இந்தியாவில் அருமையாக செயல்படுகிறார்கள். மனநலம் பற்றி அனைவரும் பேசுவது இல்லை என்றார்.

தீபிகா

தீபிகா படுகோன் போன்றோர் மனநலம் பற்றி பேசுவது இன்ஸ்பையரிங்காக இருக்கிறது. அதிகமானோர் மனநலம் பற்றி பேசினால் நல்லது. நானும், தீபிகாவும் காதலித்த காலத்தில் மனநலம் பற்றி பேசியது இல்லை. 2015-2016ம் ஆண்டு தான் மனநலம் தொடர்பான என் பயணம் துவங்கியது என்று சித்தார்த் மல்லையா தெரிவித்தார்.

மன அழுத்தம்

மன அழுத்தம் பற்றி தீபிகா முன்பு கூறியதாவது, நான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தபோது திடீர் திடீர் என்று அழுவேன். என் அம்மா தான் நான் சரியில்லை என்பதை கண்டுபிடித்தார். அதன் பிறகு மருத்துவரை அணுகுமாறு கூறினார் என்றார். தீபிகா மன அழுத்தம் பற்றி அடிக்கடி பேசுகிறார். இதனால் மன அழுத்தத்தை வைத்து விளம்பரம் தேடுகிறார் தீபிகா என்று சமூக வலைதளவாசிகள் அவ்வப்போது கிண்டல் செய்கிறார்கள்.