சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு‘ படத்தில் நடித்துள்ளார் சிம்பு. கடந்த பொங்கலுக்கு சிம்பு நடிப்பில் வெளியான ‘ஈஸ்வரன்’ படத்திற்கு பிறகு நீண்ட காலமாக இந்த படத்திற்காக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ‘மாநாடு’ படம் சிம்புவிற்கு மிகப்பெரிய கம்பேக்காக அமையும் என தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

இந்நிலையில் இன்று ‘மாநாடு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிலம்பரசன், எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் யுவன் பற்றி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும் பொது, இளையராஜாவுக்கு எப்படி ‘காதலுக்கு மரியாதை’ ஒரு கம்பேக்காக இருந்ததோ அதே போல இந்தப் படம் யுவனுக்கு ஒரு மிகப்பெரிய கம்பேக் ஆக இருக்கும்.

சிம்பு படம் என்றாலே யுவன் மிகவும் ரசித்து இசையமைக்கிறார். இந்தப் படத்துக்கு மற்ற இரு ஹீரோக்கள் என்றால் அது யுவனும், எடிட்டர் ப்ரவீனும்தான். சிம்பு உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தாரா என்று நிறைய பேர் என்னிடம் போன் செய்து கேட்பார்கள். அப்படி எனக்கு அவரால் எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை. அவர் என்னிடம் கொடுத்த பொறுப்பை நான் சரியாக நிறைவேற்றிவிட்டேன் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

‘டெடி’ பட கூட்டணியின் அடுத்த படைப்பு: ஆர்யா நெகிழ்ச்சி பதிவு!
‘மாநாடு’ படத்தில் கல்யாணி, எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா மற்றும் கருணாகரன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர். இந்தப்படம் நவம்பர் 25ஆம் தேதி திரையரங்களில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பேசும் போது, ‘எப்பவும் பார்க்குற சிம்புவ இந்தப்படத்தில் பார்க்க முடியாது. வேறொரு சிம்புவை பார்க்கலாம். எஸ்.ஜே.சூர்யாவிற்கும் சிம்புவுக்கு நடக்கும் ஒரு விளையாட்டுதான் இப்படத்தில் அதிகம் இருக்கும். இதற்கு நடுவில் நாயகி கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் வருவார்கள். நல்ல பொழுதுபோக்கு படமாக ‘மாநாடு’ உருவாகி இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

அட ராய் லெட்சுமியா இது; நம்பவே முடியலேயேப்பா!