சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு‘ திரைப்படத்தில் நடித்துள்ளார் சிம்பு. கடந்த பொங்கலுக்கு சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்திற்கு பிறகு நீண்ட காலமாக இந்த படத்திற்காக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் இன்றைய தினம் ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகுமா என ஆர்வமுடன் காத்திருகின்றனர் ரசிகர்கள்.

‘மாநாடு’ படத்தில் சிம்புவிற்கு ஜோடியாககல்யாணி நடித்துள்ளார். இவர் சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர. இவர்களுடன் எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா மற்றும் கருணாகரன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

அண்மையில் மாநாடு திரைப்படத்தின் ‘மெர்ஸைலா’ என்கிற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலை யுவனும், அவரது சகோதரி பவதாரணியும் இணைந்து பாடி இருந்தனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை யுவனின் யு1 ரெக்கார்ட்ஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

28 வருடங்களுக்கு முன்பு பார்த்த அதே ரஜினிகாந்த்: ‘அண்ணாத்த’ படம் குறித்து நடிகை குஷ்பு!
சமீபத்தில் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் துவங்க உள்ளதாக படக்குழுவினர் அறிவித்தனர். இந்நிலையில் இன்று மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகுமா என ட்விட்டரில் படக்குழுவினரை டேக் செய்து கேட்டு வருகின்றனர் ரசிகர்கள். மேலும் ட்விட்டரில் #Maanaadu என்ற ஹேஸ்டாக்கும் டிரெண்டாகி வருகிறது.

மாநாடு படத்தில் அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞர் வேடத்தில் நடிக்கிறார் சிம்பு. அரசியல் மாநாடு ஒன்றில் நடக்கும் அதிரடியான திருப்பங்கள் கொண்ட நிகழ்வுகளை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாநாடு படத்தின் செகண்ட் சிங்கிள் அல்லது படம் தொடர்பான அறிவிப்பு ஏதேனும் வெளியாகும் என ஆர்வமுடன் காத்திருக்கின்றனர் சிம்பு ரசிகர்கள்.