ஹைலைட்ஸ்:

  • மாநாடு ரிலீஸுக்கு உதவிய தயாநிதி அழகிரி?
  • நான் ஒன்னும் செய்யவில்லை- தயாநிதி அழகிரி

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது. முன்னதாக மாநாடு படம் திட்டமிட்டபடி ரிலீஸாகாது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.

கடைசி நேரத்தில் ஏற்பட்ட பண பிரச்சனையால் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து பைனான்சியர் அன்புச்செழியன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், சிம்புவின் பெற்றோர், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரால் பணப் பிரச்சனை தீர்ந்து படம் ரிலீஸானது.

கடைசி நேரத்தில் மாநாடு ரிலீஸில் சிக்கல்: திடீர்னு வந்த உதயநிதி, விடிய விடிய நடந்தது என்ன?இந்நிலையில் மாநாடு படம் சரியான நேரத்தில் ரிலீஸாக தயாநிதி அழகிரி முக்கிய பங்காற்றியதாக விமர்சகர் ஒருவர் ட்வீட் செய்தார்.

தயாநிதியும், வெங்கட் பிரபுவும் நண்பர்கள் ஆவர். அதனால் நண்பருக்காக உதவினார் என்றார் அவர்.

dhayanidhi

விமர்சகரின் ட்வீட்டை பார்த்த தயாநிதி அழகிரியோ, சத்தியமா இல்லை ப்ரோ. உங்களையும், பலரையும் போன்று சிம்புவுக்கும், மாநாடு படக்குழுவுக்கும் நல்லதே நடக்க வேண்டும் என்று விரும்பினேன். படம் இன்று ரிலீஸாகி நன்றாக சென்று கொண்டிருப்பதில் மகிழ்ச்சி என்றார்.

மாநாடு படத்தை பார்த்த அனைவருக்கும் பிடித்திருக்கிறது. சமூக வலைதளங்களில் மாநாடு பற்றி பலரும் பாராட்டி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.