ஹைலைட்ஸ்:

  • சண்டை பயிற்சி பெறும் விஜய் சேதுபதி மகன்
  • சூர்யா விஜய் சேதுபதியின் ஸ்டண்ட் வீடியோ வைரல்

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தன் அப்பா நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான நானும் ரௌடி தான் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். விக்னேஷ் சிவன் இயக்கிய அந்த படத்தில் சிறு வயது விஜய் சேதுபதியாக நடித்தார் சூர்யா.

அதன் பிறகு 2019ம் ஆண்டு வெளியான சிந்துபாத் படத்தில் தன் அப்பாவுடன் சேர்ந்து நடித்தார். நடிப்பில் ஆர்வம் கொண்ட சூர்யா ஸ்டண்ட் பயிற்சி எடுத்து வருகிறார்.

அவர் ஸ்டண்ட் பயிற்சி எடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோவில் மானாட மயிலாட நிகழ்ச்சி புகழ் கோகுல்நாத்துடன் சேர்ந்து சண்டை போடுகிறார். வீடியோவை பார்த்த விஜய் சேதுபதி ரசிகர்கள் இம்பிரஸ் ஆகிவிட்டனர்.

ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

சந்தோஷம் சூர்யா. அப்பாவுக்கு நல்ல பெயர் எடுத்துக் கொடுக்க வேண்டும். வளர்ந்த பிறகு உங்களை ஹீரோவாக பார்க்க காத்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

கெரியரை பொறுத்தவரை ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் இந்தி வெப்தொடரில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் விக்ரம் படத்தில் கமல் ஹாசனுக்கு வில்லனாக நடிக்கிறார்.

இது தவிர்த்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தாவுடன் சேர்ந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கிறார். அந்த படத்தை அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.