ஹைலைட்ஸ்:

  • வலிமை அப்டேட் வெளியாகியிருக்கிறது
  • டப்பிங் பணி கிட்டத்தட்ட நிறைவு
  • பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்காக காத்திருக்கும் படக்குழு

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விலமை படத்தின் ஒரேயொரு பைக் ஸ்டண்ட் காட்சியை தான் படமாக்க வேண்டும். அதை ஸ்பெயினில் இருக்கும் நிபுணர்கள் உதவியுடன் படமாக்க முடிவு செய்தார் வினோத்.

அதற்குள் கொரோனா வைரஸ் பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்ததால் படக்குழுவால் ஸ்பெயினுக்கு செல்ல முடியவில்லை. இந்த நேரத்தில் சும்மா இருக்காமல் டப்பிங் பணியை கிட்டத்தட்ட முடித்துவிட்டார்கள். போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் படம் குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. வெளிநாட்டிற்கு செல்வதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட உடன் ஸ்பெயினுக்கு கிளம்புகிறதாம் படக்குழு. அப்படி கட்டுப்பாடுகளை தளர்த்த காலதாமதமானால் வேறு ஏற்பாடுகள் செய்யவும் படக்குழு தயாராக இருக்கிறதாம்.

வலிமை படத்தில் 5 சண்டை காட்சிகள் இருக்கிறதாம். மூன்று சண்டை காட்சிகளை ஹைதராபாத்திலும், இரண்டு சண்டை காட்சிகளை சென்னையிலும் படமாக்கியிருக்கிறார்கள். அந்த காட்சிகளுக்கான பேட்ச் அப் வேலை இருக்கிறதாம். அதை மூன்று நாட்களில் முடித்துவிடலாமாம்.

வலிமை படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டார்கள். ஆனால் தற்போதைய சூழலில் அது சாத்தியமில்லை. இதையடுத்து தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக வரும் நவம்பர் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வரும் வேகத்தை பார்த்தால் இந்த தீபாவளி தல தீபாவளி தான் என்கிறார்கள். வலிமை படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார்.

பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி, சுமித்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். அதனால் பிஜிஎம் மற்றும் பாடல்கள் வேற லெவலில் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

வலிமை பட வேலை கிட்டத்தட்ட முடிந்துள்ள நிலையில் அஜித்தை அடுத்து இயக்கப் போவது யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ஆசையை சொன்ன சிவகார்த்திகேயன்: வருத்தப்பட்ட ரசிகர்கள்