ஹைலைட்ஸ்:

  • வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ திரைப்படத்தில் நடித்துள்ளார் நடிகர் சிம்பு.
  • ‘மாநாடு’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்து யுவன் ஷங்கர் ராஜா ட்விட்.
  • மாநாடு திரைப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளது யூ1 ரெக்கார்ட்ஸ்.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தில் நடித்துள்ளார் நடிகர் சிம்பு. இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்து கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு முறை மாநாடு திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகும் போதெல்லாம், அதனை #maanaadu என்ற ஹேஸ்டாக்கில் ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர் சிம்பு ரசிகர்கள். இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.

சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான கல்யாணி ‘மாநாடு’ திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ் மற்றும் கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மாநாடு திரைப்படத்தில் முதன்முறையாக அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞர் வேடத்தில் நடித்துள்ளார் சிம்பு. படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ‘மாநாடு’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீசுக்காக ஆவலாக காத்திருக்கின்றனர் சிம்பு ரசிகர்கள்.

பிரேமம் மலர் டீச்சராக முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா..?: ரகசியம் உடைத்த இயக்குனர்!
இந்நிலையில் ரம்ஜானை முன்னிட்டு கடந்த மாதம் 4 ஆம் தேதி மாநாடு திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை வெளியிடுவதாக அறிவித்திருந்தனர் படக்குழுவினர். ஆனால் கடந்த மே 2 ஆம் தேதி மாநாடு திரைப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயார் வயது மூப்பின் காரணமாக காலமானதால், மாநாடு பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தள்ளி போனது

அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக சிம்பு ரசிகர்கள் மாநாடு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் கேட்டு வந்தனர். இதனையடுத்து படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாநாடு’ படத்தின் இசை வெளியீட்டு உரிமையை யுவன்சங்கர் ராஜாவின் ’யூ1 ரெக்கார்ட்ஸ் நிறுவனம்தான் பெற்றுள்ளது என்றும் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட்டை யுவன் ஷங்கர் ராஜா அறிவிப்பார் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாநாடு’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ஜூன் 21 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இதனால் சிம்பு மற்றும் யுவன் சங்கர் ராஜா ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.