ஹைலைட்ஸ்:

  • வசந்தபாலன் படத்தில் நடிக்கும் வனிதா
  • அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் வனிதா

கைதி, மாஸ்டர் படங்கள் புகழ் அர்ஜுன் தாஸை ஹீரோவாக வைத்து படம் இயக்கி வருகிறார் வசந்தபாலன். அந்த படத்தில் சார்பட்டா பரம்பரை படம் புகழ் துஷாரா விஜயன் ஹீரோயினாக நடிக்கிறார். கொரோனாவின் இரண்டாம் அலை துவங்குவதற்கு முன்பு படப்பிடிப்பை துவங்கினார்கள்.

அதன் பிறகு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் படப்பிடிப்பை நிறுத்தி வைத்தனர். மேலும் வசந்தபாலனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்திருக்கிறார். இந்நிலையில் மீண்டும் படப்பிடிப்பை துவங்கிவிட்டார் வசந்தபாலன்.

அந்த படத்தில் வனிதா விஜயகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த அர்ஜுன் சிதம்பரமும் வசந்தபாலன் படத்தில் நடிக்கிறார்.

வனிதா, அர்ஜுன் சிதம்பரம் தவிர்த்து பிரபல டான்ஸர் சாந்தா தனஞ்செயனையும் ஒப்பந்தம் செய்திருக்கிறார் வசந்தபாலன். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையாக நடிக்கிறாராம் சாந்தா.

வனிதாவின் செகண்ட் இன்னிங்ஸ் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. பிரசாந்தின் அந்தகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் அடுத்தடுத்து புதுப்படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.
அக்கா காட்டில் வாய்ப்பு மழை தான் போங்க என்கிறார்கள் வனிதாவின் ஆதரவாளர்கள்.

வசந்தபாலன் பட வாய்ப்பு கிடைத்தது பற்றி துஷாரா கூறியதாவது,

நான் ரஞ்சித் சார் படப்பிடிப்பில் இருந்தபோது அதே ஷூட்டிங்ஸ்பாட்டில் நடந்த இந்தியன் 2 படப்பிடிப்பை நடத்திய ஷங்கர் சாரை பார்த்க வந்தார் வசந்தபாலன். அப்பொழுது என்னை பார்த்துவிட்டு தன் அலுவலகத்திற்கு வருமாறு கூறினார்.

அர்ஜுன் தாஸுடன் லுக் டெஸ்ட் நடத்தி, எனக்கு வாய்ப்பு கொடுத்தார். சுப்புலட்சுமி என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இது மாரியம்மாவுக்கு நேர் எதிரான கதாபாத்திரம் என்றார்.

ஆசையா போட்டோ வெளியிட்ட விக்கி: நயன்தாரா கர்ப்பம்னு குதித்த ரசிகர்கள்