கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் மாளவிகா மோகனன். அதனைத் கடந்த பொங்கலுக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில் பேட்ட திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவம் பற்றி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அதில், ‘நான் மும்பையில் வளர்ந்த காலத்திலேயே ரஜினிதான் இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரம் என்று அங்கிருப்பவர்களே பேசுவார்கள். அவரோடு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது என்னுடைய முதல் தமிழ் திரைப்படம் ‘பேட்ட’ மூலமாகவே நடந்துவிட்டது. முதலில் டேஹ்ராடூன் படப்பிடிப்பில்தான் அவரைச் சந்தித்தேன்.

சைஸ் கேட்ட நெட்டிசன்: கூலான பதிலால் இணையத்தை ஆச்சரியப்பட வைத்த பார்வதி நாயர்!
இப்படி நான் யாரைப் பற்றியும் விவரித்ததில்லை, ஆனால், அவர் இருந்த இடமே தெய்வீகமாக, அவரைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் இருந்ததைப் போல அந்த அறையே அப்படி ஒரு உணர்வைத் தந்தது. படத்தில் நான் நீளமாகப் பேசவேண்டிய வசனம் ஒன்று இருந்தது. எனக்குத் தமிழ் தாய்மொழி இல்லை என்பதால் எப்படியும் பல டேக்குகள் வாங்குவேன் என்று தயார் செய்து வைத்திருந்தார்கள்.

ஆனால், நான் அந்த வசனத்தை ஒரு மாதம் முன்பே மனப்பாடம் செய்திருந்ததால் ஒரே டேக்கில் நடித்து முடித்துவிட்டேன். ரஜினி சாரே எழுந்து நின்று கை தட்டினார். அதன் பிறகு அவர் என்னிடம் நன்றாகப் பேச ஆரம்பித்தார். ‘மாஸ்டர்’ பார்த்துவிட்டு என்னை அழைத்து வாழ்த்தினார்’ என தெரிவித்துள்ளார். மாளவிகா மோகனன் அடுத்ததாக தனுஷ் ஜோடியாக D43 திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.