ஹைலைட்ஸ்:

  • வம்சி பைடிபல்லி இயக்கும் தளபதி 66
  • பிரபுதேவாவுக்கு கோரிக்கை விடுத்த விஜய்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். படப்பிடிப்பு டிசம்பர் மாதம் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து 2022ம் ஆண்டின் துவக்கத்தில் தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். அந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கிறார்.

பெரும் பொருட்செலவில் உருவாகும் அந்த படத்தை தற்போதைக்கு தளபதி 66 என்று அழைக்கப்படும் அந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப்படவிருக்கிறது. விஜய் எப்படி சூப்பராக டான்ஸ் ஆடுவார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் தளபதி 66 படத்தில் தனக்கு இரண்டு பாடல்களுக்கு டான்ஸ் ஸ்டெப்ஸ் போட்டுக் கொடுக்குமாறு பிரபுதேவாவிடம் கோரிக்கை விடுத்திருக்கிறாராம் விஜய்.

தளபதி கேட்டு முடியாது என்றா சொல்ல முடியும், உடனே ஓகே சொல்லிவிட்டாராம் பிரபுதேவா.

முன்னதாக பிரபுதேவாவின் இயக்கத்தில் போக்கிரி, வில்லு ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் விஜய். அதில் போக்கிரி சூப்பர் ஹிட்டானது.

விஜய்க்காக ஸ்பெஷலான கதையை உருவாக்கியிருப்பதாக வம்சி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் கல்யாணம் பண்ணா யுவன் மாதிரி…: ஆசையை சொன்ன சிம்பு