மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் சிம்பு அடுத்ததாக கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்காக நம்ப முடியாத அளவிற்கு உடல் எடையை குறைத்து அடையாளமே தெரியாமல் தோற்றமளிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் நடிகர் சிம்பு, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு ஸ்டைலிஷ் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சிம்பு என்றால் படப்பிடிப்பு தளத்திற்கு ஒழுங்காக வர மாட்டார். தயாரிப்பாளர்களுக்கு அவரால் கஷ்டம் என்பதை போன்ற குற்றச்சாட்டுகளை சமீபகாலமாக உடைந்தெறிந்து வருகிறார் சிம்பு. அந்த வகையில் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் உடல் எடைக்காக அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட சிம்பு, கடந்த பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் படத்தின் மூலம் உடல் எடையை முழுவதுமாக குறைத்து ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தார்.

அதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து முடித்த சிம்பு தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவுள்ள வெந்து தணிந்தது காடு படத்திற்காக 20 கிலோ எடையை குறைத்து சிறுவயது பையன் லுக்கில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த பலரும் சிம்பு இது என ஆச்சரியத்தில் வாயடைத்து போனார்கள்.

‘கூழாங்கல்’ பட இயக்குனருக்கு சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த இயக்குனர் ராம்!
இந்நிலையில் நடிகர் சிம்பு #AtmanReels என்ற கேப்சனோடு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 30 செகண்ட் ஓடக்கூடிய இந்த வீடியோவில் சிம்புவின் ஸ்டைலிஷ் லுக்குகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. பெண் ரசிகைகள் பலரும் சிம்புவின் இந்த வீடியோவிற்கு ஹார்ட்டின்கள் பறக்கவிட்டு வருகின்றனர்.

சிம்பு நடிப்பில் மாநாடு, மஹா படங்கள் தயாராகி ரிலீசுக்கு காத்து கொண்டிருக்கின்றன. தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு இருவரும் மூன்றாவது முறையாக இணையும் படம் என்பதால் இப்போதே இந்த பத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.