தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக அறிமுகமாகி, நடிகராக உயர்ந்து தற்போது இயக்குநராக வலம் வருபவர் நடிகர் பிரபுதேவா. இவர் தற்போது பாலிவுட் சினிமாவிலும் தொடர்ச்சியாக படங்களை இயக்கி வருகிறார். பிசியாக படங்கள் இயக்கி வந்தாலும், தனக்கு பிடித்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபு தேவா ஹீரோவாக நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது.

ஹரஹர மஹாதேவகி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரபு தேவா. இந்த திரைப்படத்தை தனுஷின் முன்னாள் மேலாளரும், ‘வெள்ளை யானை’, ‘எனிமி’ படங்களின் தயாரித்த வினோத்குமார் தயாரிக்க உள்ளார்.

இந்தப்படத்தின் முதற்கட்டப் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு நிறைவடைந்தன. இந்நிலையில் அண்மையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் பிரபுதேவாவுடன், வரலட்சுமி சரத்குமார், ரைசா வில்சன் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக பல்லூ, இசையமைப்பாளராக டி.இமான் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

D44 படத்தில் இணைந்த பாரதிராஜா – பிரகாஷ் ராஜ்: விரைவில் படப்பிடிப்பு துவக்கம்!
இந்தப்படம் சந்தோஷ் பி ஜெயகுமாரின் முந்தைய படங்களை போல் அல்லாமல் முற்றிலும் குடும்ப பொழுது போக்கு படமாக இந்த படம் உருவாக உள்ளதாம். இந்த படத்தில் பிரபுதேவாவின் கதாபாத்திரம் இதுவரை அவர் நடித்திராத முற்றிலும் மாறுபட்ட ரோலாக இருக்கும் என அண்மையில் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் ஒரு கால் இல்லாத மாற்றுத்திறனாளியாக, தோளில் சிறுமியுடன் மிரட்டலாக நிற்கிறார் பிரபுதேவா. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபு தேவா நடிப்பில் ஏற்கனவே பொன்மாணிக்கவேல், யங் மங் சங், பஹீரா உள்ளிட்ட படங்கள் தயாராகி ரிலீசுக்கு காத்து கொண்டிருக்கின்றன. இதில் பொன் மாணிக்கவேல் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. பஹீரா படத்தை திரிஷா இல்லன்னா நயன்தாரா பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். அண்மையில் வெளியான இந்தப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.