சைக்கோ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கி வந்தார் மிஷ்கின். அப்போது நடிகர் விஷாலுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக படத்திலிருந்து விலகினார். இதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் மிஷ்கின் ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 படத்தை இயக்கி வருறார். இந்நிலையில் இந்தப்படத்தில் தற்போது இன்னொரு இளம் நடிகை ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பாலா தயாரித்திருந்த இந்தப்படத்தில் அறிமுக நடிகர் நாகா, மலையாள நடிகை பிரகையா மார்டின் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ராதாரவி நடித்திருந்தார். இந்நிலையில் இந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்தப்படத்திற்கும் பிசாசு முதல் பாகத்திற்கும் எந்த தொடர்பு இல்லை என மிஷ்கின் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆண்ட்ரியாவுடன் பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.

மீண்டும் இணைந்த கூட்டணி: வெற்றிமாறன் தயாரிப்பில் நடிக்கும் ஆண்ட்ரியா!
இந்நிலையில் தற்போது இந்தப்படத்தில் நமிதா கிருஷ்ணமூர்த்தி இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் சமீபத்தில் வெளிவந்த தமன்னாவின் நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த வெப் சீரிஸில் இவரின் நடிப்பு பலரிடமும் பாராட்டுக்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் டிசம்பரில் தொடங்கிய பிசாசு 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி பேய் ஓட்டுபவர் ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அண்மையில் பிசாசு 2 திரைப்படம் குறித்து ட்விட்டர் ஸ்பேஸில் உரையாடிய இயக்குனர் மிஷ்கின், இந்தப்படத்திற்காக ஆண்ட்ரியாவிற்கு தேசிய விருது கிடைக்கும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.