வெற்றிமாறன் தற்போது சூரி நடிப்பில் விடுதலை திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வாடிவாசல் திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆண்ட்ரியா. அமீர் மனைவியாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப்படத்தில் நடிகை ஆண்ட்ரியாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. மேலும் வெற்றிமாறனின் ஆடுகளம் திரைப்படத்திற்கும் நடிகை டாப்சிக்கு பின்னணி குரல் கொடுத்திருந்தார் ஆண்ட்ரியா.

இந்நிலையில் ஆண்ட்ரியா ஹீரோயினாக நடிக்க உள்ள புதிய திரைப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் தயாரிக்க உள்ளது. இந்தப்படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குனர் ஆனந்த் என்பவர் இயக்கவுள்ளார். பெண்களை மையப்படுத்தி உருவாக உள்ள இந்த படத்தில் ஆண்ட்ரியா லீட் ரோலில் நடிக்கிறார். இதனிடையில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் பிசாசு 2 திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

வலிமை ரிலீசுக்கு முன்பே துவங்கும் தல 61 படப்பிடிப்பு: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் அண்மையில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான சங்கத்தலைவன் என்ற திரைப்படத்தினை தயாரித்திருந்தது. மேலும் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘அதிகாரம்’ திரைப்படத்துக்கான கதையை எழுதி, பைவ் ஸ்டார் கதிரேசனுடன் இணைந்து இந்த படத்தையும் வெற்றிமாறன் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.