பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி, ஆர்யா நடிப்பில் வெளியான ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. அதனை தொடர்ந்து விஜய்யை வைத்து தேறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்த தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இந்நிலையில் அட்லியின் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

சென்னை 600028, சுப்பிரமணியபுரம், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி மற்றும் கலகலப்பு 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் நடிகர் ஜெய். அட்லி இயக்கத்தில் வெளியான ‘ராஜா ராணி’ திரைப்படத்தில் குடும்பத்துக்காக தன்னுடைய காதலை தியாகம் செய்பவராக நடித்திருந்தார். இந்நிலையில் அட்லீ தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் ஒன்றில் ஜெய் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரம்மாண்ட இயக்குனர் படத்தில் மாஸ்டர் பட நடிகை..?: மாளவிகா மோகனனுக்கு அடித்த ஜாக்பாட்!
அட்லீ தனது மனைவி பிரியாவுடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது முதல் தயாரிப்பாக ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற படம் வெளி வந்தது. ஜீவா மற்றும் ஸ்ரீதிவ்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த அந்தப் படத்தில், ஜெய் ஒரு சிறப்புத்தோற்றத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், இயக்குனர் அட்லீ அடுத்ததாக தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் ஜெய் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஒருவர், இப்படத்தை இயக்க உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.