நயன்தாரா நடிப்பில் வெளியான ‘நெற்றிக்கண்’ படத்தை இயக்கி இருந்தார் மிலிந்த் ராவ். அண்மையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான இந்தப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான இந்தப்படத்தில் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்திருந்த்தார் நயன்தாரா. இந்நிலையில் இயக்குனர் மிலிந்த் ராவ்வின் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

‘நெற்றிக்கண்’ படத்தை தொடர்ந்து ஆர்யா நடிப்பில் வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவுள்ளார் மிலிந்த் ராவ். ஷாமிக் தாஸ்குப்தாவின் ‘தி வில்லேஜ்’ கிராபிக்ஸ் நாவலை மையப்படுத்தி இந்த வெப் சீரிஸ் உருவாகவுள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இந்த சீரிஸில் ஆர்யாவுடன் இணைந்து பசுபதியும் நடிக்கவுள்ளார்.

அண்மையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் நடித்திருந்தார் ஆர்யா. அமேசான ப்ரைம் தளத்தில் வெளியான இந்தப்படம் பாக்சிங்கை மையமாக வைத்து உருவானது. இந்தப்படத்தில் ஆர்யாவின் நடிப்பு திரையுலக பிரபங்களாலும், ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. இந்தப்படத்தில் ரங்கன் வாத்தியார் கதாபாத்திரத்தில் பசுபதி நடித்திருந்தார்.

அண்ணியின் பிறந்தநாள் கொண்டாட்ட பார்ட்டியில் தனுஷ்: வைரலாகும் புகைப்படங்கள்!‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் பாக்ஸிங் வீரராக கபிலன் கதாபாத்திரத்தில் ஆர்யா, ரங்கன் வாத்தியாராக பசுபதி நடித்திருந்தனர். இவர்களுடன் அனுபாமா குமார், சஞ்சனா நடராஜன், சந்தோஷ் பிரதீப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப்படத்தில் ரங்கன் வாத்தியாராக நடித்திருந்த பசுபதியின் நடிப்பும், பாக்ஸராக நடித்திருந்த ஆர்யாவின் நடிப்பும் பலரையும் கவர்ந்திருந்தது.

இந்நிலையில் மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகவுள்ள வெப்சீரிஸில் ஆர்யாவும், பசுபதியும் இணைந்து நடிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.ஏற்கனவே ‘சார்பட்டா பரம்பரை’படத்தில் ஆர்யா , பசுபதி இருவருடைய காட்சிகளை முன்வைத்து வெளியான மீம்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.

பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டே-வின் வைரல் வீடியோ!