ஹைலைட்ஸ்:

  • மீண்டும் கர்ப்பமாக இருக்கும் சவுந்தர்யா விசாகன்
  • மீண்டும் தாத்தாவாகும் ரஜினிகாந்த்

ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபரும், நடிகருமான விசாகன் வணங்காமுடிக்கும் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதி திருமணம் நடந்தது. சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

இந்நிலையில் சவுந்தர்யா கர்ப்பமாக இருக்கிறார். தன் அப்பா ரஜினி அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்ததும் இந்த நல்ல செய்தியை சொல்லி அவரை மகிழ்ச்சி அடைய வைத்தாராம்.

சவுந்தர்யாவுக்கு முதல் திருமணம் மூலம் வேத் கிருஷ்ணா என்கிற மகன் இருக்கிறார். சவுந்தர்யாவின் மறுமணத்தின்போதும், அதன் பிறகும் விசாகன் எப்பொழுதும் வேதுடன் நெருக்கமாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் அவரை வாழ்த்தினார்கள்.

வேதுக்கு நல்ல அப்பா கிடைத்துவிட்டார் என்றார்கள். இந்நிலையில் வேத் கிருஷ்ணாவுக்கு விரைவில் தம்பியோ, தங்கச்சி பாப்பாவோ வரப் போகிறது. ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா தனுஷுக்கு இரண்டுமே ஆண் பிள்ளைகள். அதனால் சவுந்தர்யாவுக்கு மகள் பிறக்க வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

ரஜினி தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக வரும் நவம்பர் மாதம் 4ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இதையடுத்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் புகழ் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினி.

தலைவர் 170 படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினை பகைத்துக் கொண்ட பிக் பாஸ் பிரபலம்