ஹைலைட்ஸ்:

  • பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாகும் மீனா
  • கோபிசந்த் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் பாலகிருஷ்ணா
  • மற்றொரு ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் தேர்வு

60 வயதானாலும் இன்னும் இளம் ஹீரோக்களுக்கே சவால் விடும் வகையில் நடித்துக் கொண்டிருக்கிறார் பாலகிருஷ்ணா. அவரின் புதுப்படங்கள் குறித்து அறிவிப்பு வெளியானால் ரசிகர்கள் குஷியாகிவிடுகிறார்கள்.

இந்நிலையில் தான் அவர் கோபிசந்த் இயக்கத்தில் புதுப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தில் பாலகிருஷ்ணா இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம். இரண்டு கதாபாத்திரங்களுக்கான லுக்கை தயார் செய்து கொண்டிருக்கிறார்களாம்.

அதில் ஒரு பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மற்றொரு பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக மீனா நடிக்கிறாராம்.

மீனாவின் கதாபாத்திரம் ஃபிளாஷ்பேக்கில் வருமாம். இருப்பினும் வெயிட்டான கதாபாத்திரம் என்பதால் மீனா அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

முன்னதாக பாலகிருஷ்ணாவும், மீனாவும் சேர்ந்து முத்துல மொகுடு, பாபிலி சிம்ஹம் ஆகிய படங்களில் நடித்துள்ளனர். அந்த பழைய மேஜிக்கை கோபிசந்த் படத்திலும் கொண்டு வருவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மீனாவின் கெரியர் தற்போது சூப்பராக சென்று கொண்டிருக்கிறது என்றே கூற வேண்டும். மோகன்லாலுடன் சேர்ந்து அவர் நடித்த த்ரிஷ்யம் 2 படம் அமேசான் பிரைமில் வெளியானது. அந்த படத்திற்கு அனைத்து மொழி ரசிகர்களும் அமோக ஆதரவு அளித்தனர்.

இதையடுத்து த்ரிஷ்யம் 2 படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார்கள். அதில் வெங்கடேஷுக்கு ஜோடியாக மீனா நடிக்கிறார். மேலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மீனா.

அவருக்கு உங்கப்பா வயசு, வேண்டாம் ஸ்ருதி, விஷ பரீட்சை: ரசிகர்கள் எச்சரிக்கைஇதற்கிடையே பாலகிருஷ்ணாவுடன் சேர்ந்து ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார் என்கிற தகவல் அறிந்த ரசிகர்கள் அவரை எச்சரித்துள்ளனர். பாலகிருஷ்ணாவின் கெரியர் சரியில்லை. மேலும் அப்பா வயது பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்தால் இனி இளம் ஹீரோக்கள் உங்களுடன் நடிக்க மாட்டார்கள். பாலகிருஷ்ணா படத்தில் நடிக்க முடியாது என்று கூறுங்கள் ஸ்ருதி என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக கோபிசந்த் இயக்கிய பலுப்பு மற்றும் கிராக் ஆகிய படங்களில் ஸ்ருதி தான் ஹீரோயின். அந்த நட்புக்காக தான் பாலகிருஷ்ணா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் ஸ்ருதி என்று கூறப்படுகிறது.