ஹைலைட்ஸ்:

  • வில்லியாக நடிக்க விரும்பும் மீனா
  • மீனாவை வில்லியாக பார்க்க முடியாது- ரசிகர்கள்

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர் மீனா. வளர்ந்த பிறகு ஹீரோயின் ஆனார்.
ஹீரோயினாக ஒரு பெரிய ரவுண்டு வந்தவர் மீனா. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழி படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

கிட்டத்தட்ட அனைத்து பெரிய நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்துவிட்டார். திருமணம், குழந்தை என்றான பிறகு அதிக படங்களில் நடிக்காமல் இருக்கிறார். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் அவர் மோகன்லாலுடன் சேர்ந்து நடித்த த்ரிஷ்யம் 2 படம் அமேசான் பிரைமில் அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

இதையடுத்து த்ரிஷ்யம் 2 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷுடன் நடித்து முடித்துள்ளார். மேலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் மீனா. ரஜினி தொடர்பான காட்சிகளை படமாக்கிவிட்டார்கள்.

மீனா, நயன்தாரா வரும் காட்சிகளை கொல்கத்தாவில் படமாக்க காத்திருக்கிறார்கள். மீனா நடிக்க வந்து 40 ஆண்டுகளாகிவிட்டது.

ஹீரோயினாக மட்டும் 30 ஆண்டுகள் நடித்திருக்கிறார். 30 ஆண்டுகளாக ஹீரோயினாக தாக்குப்பிடிப்பது என்பது பெரிய விஷயம் என தன் கணவர் தெரிவித்ததாக மீனா கூறியுள்ளார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் மீனா கூறியதாவது,

டேட்ஸ் பிரச்சனையால் பல படங்களில் நடிக்க முடியாமல் போனது. மம்மூட்டி, மோகன்லாலுடன் சேர்ந்து ஹரிகிருஷ்ணன்ஸ் படத்தில் நடிக்க முடியாமல் போனது குறித்து தற்போதும் நான் ஃபீல் பண்ணுகிறேன். படையப்பா, வாலி, தேவர் மகன் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒரேயொரு கதாபாத்திரம் நான் இதுவரை நடித்ததும் இல்லை, இனியும் நடிக்க முடியாது. என சக நடிகைகள் அனைவரும் கல்லூரி மாணவியாக நடித்துவிட்டனர். ஆனால் நான் நடிக்கவில்லை. நான் ஒரு நடன கலைஞர். ஆனால் நடனத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு படத்தில் கூட நான் நடிக்கவில்லை.

எனக்கு நெகட்டிவான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ரசிகர்களின் மனம் மாறிக் கொண்டிருக்கிறது. இந்த கதாபாத்திரம் நம் இமேஜுக்கு சரிபட்டு வருமா என்று முன்பு யோசிப்போம். ஆனால் அது வெறும் கதாபாத்திரம் என்பதை தற்போது ரசிகர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன் என்றார்.

மீனா கூறியதை பார்த்த ரசிகர்களோ, அய்யோ உங்களை வில்லியாக பார்க்க எங்களால் முடியாது. நீங்கள் எப்பொழுதுமே ஸ்வீட். விஜய் சேதுபதி ஹீரோ, வில்லன் என்று மாறி மாறி நடிப்பதை பார்த்து உங்களுக்கும் அந்த ஆசை வந்துவிட்டதா என்று கேட்கிறார்கள்.

பிரபுதேவா பட ஹீரோயின் இப்போ எந்த நடிகரின் மனைவினு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க