Memes
oi-Jaya Chitra
சென்னை: ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமிய நண்பர்களுக்கு வாழ்த்துக்களோடு, சைடு கேப்பில் பிரியாணியையும் நாசுக்காகக் கேட்டு மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான ரம்ஜான் இன்று கொண்டாடப்படுகிறது. ரம்ஜான் என்றாலே நம்மில் பெரும்பாலானவர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது பிரியாணி தான். மற்ற நாட்களில் கேர்ஸ் பிரண்ட்டு இல்லையே என கவலைப்படுபவர்கள்கூட, இன்று தான் ‘பாய்’ பிரண்டை பற்றி அதிகம் நினைப்பார்கள். அந்தளவுக்கு பாய் பிரண்டைவிட அவர்கள் தரும் பிரியாணி மீது பாசம் அதிகம்.

நள்ளிரவு 1 மணிக்கு எழுப்பிக் கொடுத்தால்கூட பிரியாணி சாப்பிடும் அளவிற்கு, நம்மூரில் பிரியாணி பிரியர்கள் அதிகம். மற்ற நாட்களிலேயே பிரியாணி, பிரியாணி என அலைபவர்கள், ரம்ஜான் நாளான இன்று சும்மா இருப்பார்களா? என்னதான் கடையில் காசு கொடுத்து பிரியாணி வாங்கிச் சாப்பிட்டாலும், அது இஸ்லாமிய நண்பர்கள் தரும் பிரியாணிக்கு ஈடாகாது.

எனவே, ஜாடைமாடையாக வாழ்த்தோடு, பிரியாணியையும் கேட்டு மீம்ஸ் போட்டு வருகின்றனர் பிரியாணி பிரியர்கள். ‘பிரியாணி தர்றேன்னு சொல் கண்ணே.. அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்..’ என ஒரு பக்கம் கவிஞர்களாக மாறி வாழ்த்துக்களை பரிமாறி வரும் நெட்டிசன்கள், மறுபுறம் நவீன திருக்குறளெல்லாம்கூட எழுதி இருக்கிறார்கள்.

இதோ அப்படியாக சில ஜாலி பிரியாணி மீம்ஸ்கள் உங்களுக்காக…
English abstract
Those are some jolly memes collections on Ramzan.
Tale first revealed: Tuesday, Might 3, 2022, 13:13 [IST]