சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புஷ்பா‘ படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்த படத்தில் ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்து வருகின்றனர்.

தெலுங்குத் திரையுலகில் முன்னணித் தயாரிப்பு நிறுவனமாக வலம் வருவது மைத்ரி மூவி மேக்கர்ஸ். மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், பாலகிருஷ்ணா, ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட தெலுங்கு முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் மிகப்பெரிய பொருட் செலவில் ‘புஷ்பா’ படம் உருவாகி வருகிறது.

‘புஷ்பா’ படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தல் மற்றும் அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் மிரட்டலான தோற்றத்தில் நடித்துள்ளார்.

ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஜி.வி. பிரகாஷ்: ‘ஜெயில்’ படம் குறித்து இயக்குனர் வசந்தபாலன்!
மேலும் பிரபல மலையாள நடிகர் ஃபஹத் பாசில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ளார். ‘புஷ்பா’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, என மொத்தம் ஐந்து மொழிகளில் உருவாகி உள்ளது. அண்மையில் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்தது. மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Pushpa

இந்நிலையில், புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் ஒரு குத்துப் பாடல் இடம்பெற உள்ளதாம். அப்பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட முன்னணி நடிகைகள் சிலரிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. தற்போது நடிகை சமந்தாவை அப்பாடலுக்கு நடனமாட ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரை நாயகியாக மட்டும் நடித்து வந்த சமந்தா முதன் முதலாக குத்துப் பாடலுக்கு நடனமாட சம்மதித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அட ராய் லெட்சுமியா இது; நம்பவே முடியலேயேப்பா!