சமூக வலைதளத்தில் அவ்வப்போது, தமிழ் திரையுலக பிரபலங்களின் பெயரில் போலி கணக்குகள் துவங்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. சமீப காலமாக நகைச்சுவை நடிகர்களின் பெயரில் போலி கணக்குகள் தொடங்கு சம்பவம் அதிகரித்துள்ளது. சம்பந்தப்பட்ட திரை பிரபலங்கள் மறுப்பு தெரிவதற்கு முன்பே பல்லாயிரக்கணக்கான நபர்கள், பிரபலங்கள் பேரில் இருக்கும் கணக்கை பின் தொடர ஆரம்பித்து விடுகின்றனர். இந்நிலையில் நடிகர் செந்தில்பெயரில் போலி ட்விட்டர் கணக்கு ஒன்று துவங்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் மூத்த நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் திகழ்பவர் செந்தில். தமிழ் சினிமாவில் இவர், கவுண்டமனி காம்போ காமெடிகளுக்கு இன்று வரை ஈடு இணையில்லை. அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கபட்ட குணமான நடிகர் செந்தில் முதன் முதலாக ஹீரோவாக நடிக்க உள்ளார். ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா இந்த படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செந்தில் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு ஒன்று துவங்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக ஒரு சில பதிவுகள் பகிரப்பட்டுள்ளன. இதனையடுத்து தன பெயரில் போலியான ட்விட்டர் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது குறித்து நடிகர் செந்தில் காவல் துறையிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

நீங்கள் பயந்த அளவுக்கு அது இல்லை: ‘தி பேமிலி மேன் 2’ சர்ச்சை குறித்து நடிகர் மனோஜ் பாஜ்பாய் விளக்கம்!
அந்த புகாரில் சினிமாவில் நாற்பது ஆண்டு காலமாக நடித்து வருகிறேன். கடந்த இரு தினங்களுக்கு முன்பாக எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் யாரோ ஒருசில விஷகிருமிகள் எனது பெயரில் தமிழ்நாடு அரசு குறித்தும், முதலமைச்சர் குறித்தும் அவதூறான கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

எனது பெயரில் வெளியான ட்விட்டர் பதிவை நீக்க வேண்டும். எனது பெயரில் போலியான ட்விட்டர் கணக்கை உருவாக்கியவர்களை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார் நடிகர் செந்தில். கடந்த சில தினங்களுக்கு முன்பாக நகைசுவை நடிகர் சார்லியும் தனது பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டிருப்பது குறித்து சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.